சிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட தம்பதி தரப்பு

Mahendran
புதன், 24 ஜனவரி 2024 (13:22 IST)
திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அந்த தம்பதிகள் சிசிடிவி வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர். 
 
வீட்டு வேலைக்கு வந்த சிறுமையை கொடுமைப்படுத்திய புகாரில் சிசிடிவி காட்சிகளை தம்பதிகள் வெளியிட்ட நிலையில் அந்த  வீடியோவில்  இளம்பெண்ணை அடித்ததாக கூறப்படும் நாட்களில் எம்எல்ஏ மகன் தனது குடும்பத்தினர் உடன்  வெளியே சென்ற காட்சி உள்ளது. இளம் பெண்ணும் அவர்களுடன் செல்கிறார். 
 
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, ஏற்காடு நட்சத்திர ஹோட்டலில் எம்எல்ஏ மகன் தங்கிய வீட்டில் இளம் பெண் கூட இருந்த காட்சிகள் உள்ளன. வெளியே செல்லும்போது கூட அன்புடன் அழைத்துச் செல்லும் தம்பதிகள் எப்படி கொடுமைப்படுத்தி இருப்பார்கள் என்ற ரீதியில் இந்த வீடியோவை தம்பதிகள் வெளியிட்டுள்ளனர்.  
 
இதனை அடுத்து இந்த வழக்கில் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்