நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ’டீப்ஃபேக் ’ வீடியோ பரப்பியர் கைது

Sinoj

சனி, 20 ஜனவரி 2024 (14:57 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ பரப்பியரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கீத கோவிந்தம், தேவ்தாஸ், டியர் காம்ரேட், சுல்தான்,. புஷ்பா, வாரிசு, அனிமல் ஆகிய படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமாக உள்ளார்.

சமீபத்தில்,  ஏஐ தொழில் நுட்பத்தால் ஆபாசமாக உருவாக்கப்பட்ட தனது DeepFake Edit வீடியோ இணையதளத்தில் பரவியதை பார்த்த நடிகை ராஷ்மிகா வருத்தம் தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக சினிமா நடிகர்கள் கருத்து கூறி, இந்த டீப் ஃபேக் வீடியோவை வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து, மத்திய அரசு, இதுபோன்ற அவதூறு செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில் டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில் 4 பேரிடம் டெல்லி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இன்று ராஷ்மிகா மந்தனாவை போன்ற பெண் உருவத்துடன் போலி வீடியோ உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பிய நபரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்