கஜா எதிரொலி: அதிமுகவுடன் ஒன்று சேரும் திமுக

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (12:11 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளும் அதிமுக அரசோடு சேர்ந்து திமுகவினரும் ஒன்றுநேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தமிழக அரசின் போதிய முன்னேற்பாடு நடவடிக்கையால் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. அதேபோல் பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. 
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கஜா புயல் தாக்குதலால் தமிழகத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் கஜா புயல் குறித்து பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு கஜா புயல் மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது.
 
இந்த இக்கட்டான நேரத்தில் கட்சி பேதம் பார்க்காமல், அரசோடு சேர்ந்து திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்