திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: கவனிக்கப்பட வேண்டிய சில...!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (13:03 IST)
2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை துரைமுருகன், டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டனர். இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு... 
 
1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
2. பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் நடத்தப்படும்
3. கொரோனா நிவாரணத்தொகையாக ரூ.4000 வழங்கப்படும்
4. பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும்
5. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்
6. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும்.
7. சட்டசபை நிகழ்ச்சிகள் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்
8. தமிழக தொழில் நிறுவனங்களில் தமிழருக்கு 75%  வேலைவாய்ப்பு வழங்க சட்டம்.
9. நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டசபை கூட்டத் தொடரில் சட்டம் கொண்டுவரப்படும்.
10. இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு ரூ1,000 கோடி ஒதுக்கப்படும்
11. ஆட்டோ தொழிலாளர் ஆட்டோ  வாங்க ரூ10,000 மானியம் வழங்கப்படும்
12. அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கப்படும்
13. அரசு பணியில் உள்ள பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதமாக அதிகரிக்கப்படும்
14. 8 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும்
15. 500 இடங்களில் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்
16. சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அரசு பணியாளர்களாக்கப்படுவர்
17. நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்