நாங்குனேரியை விட்டுக்கொடுத்தால் நாடாளுமன்ற சீட்! காங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (18:21 IST)
கடந்த 1991ஆம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு பெற்று வந்துள்ளார். அவர் பிரதமராக இருந்த பத்து ஆண்டுகளில் கூட அவர் ராஜ்யசபா எம்பியாகத்தான் இருந்தார்.
 
இந்த நிலையில் முதல்முறையாக அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மீண்டும் மன்மோகன்சிங் தேர்வு செய்யப்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு எம்பியை தேர்வு செய்யும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு அஸ்ஸாமில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை இல்லை
 
இதனையடுத்து அவர் திமுகவின் உதவியோடு தமிழகத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதற்காக முக ஸ்டாலினுடன் காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் எச்.வசந்தகுமார் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆனதால் காலியான நாங்குனேரி சட்டமன்ற தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுத்தால், மன்மோகன்சிங் அவர்களுக்காக ராஜ்யசபா எம்பி பதவி தர தயார் என திமுக தரப்பு நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் மன்மோகன்சிங் அவர்களுக்கு எம்பி பதவி கொடுத்தால் அதற்கு பதிலாக வைகோவுக்கு தருவதாக கூறியிருந்த ராஜ்யசபா பதவி கட் ஆகும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்