"300 தியேட்டர் கைவசம் இருக்கு, தைரியமாக வெளியிட தயார்" ட்வீட் செய்த திமுக எம்எல்ஏ!

வியாழன், 20 ஜூன் 2019 (15:55 IST)
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்து நடித்துவருகிறார்.
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடித்துவருகிறார். மேலும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின.
 
இந்த நிலையில் தளபதி  63 படத்தை ஆதரித்து பிரபல திமுக எம் எல் வும், நடிகருமான அன்பழகன் ட்வீட் செய்துள்ளார். அதில், எங்களுடைய கட்டுப்பாட்டில் தமிழகத்தில் மொத்தம் 300 திரையரங்குள் இருக்கிறது. எனவே இந்த படத்தை  வெளியிட தயார் என்று கூறி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது 2017ல் தலைவா படம் வெளிவருதற்கு முன் பரவலாக பேசப்பட்டது. இதனை தற்போது தளபதி 63 படத்திற்கு பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து விளம்பரம் தேடி வருகின்றனர். 
 
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாவது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்