திமுக தலைவர் கலைஞர் வீட்டு சிறை?: கட்சியையும், தலைமையையும் கைப்பற்ற திட்டம்?

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (08:14 IST)
திமுக தலைவர் கருணாநிதியை வீட்டு சிறையில் அவரது மகனும் திமுக பொருளாளருமான ஸ்டாலின் வைத்திருப்பதாக நேற்று இணையதளங்களில் செய்திகள் பரவியது.


 
 
ஆரம்ப காலத்திலிருந்தே கட்சிக்காக உழைத்த தளபதிக்கு தலைவர் பதவியை வழங்காமல் கருணாநிதி இழுத்தடித்து வருவதாகவும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே அவருக்கு தலைவர் பதவியை விட்டுக்கொடுத்திருக்க வேண்டும் என தளபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள் பேசி வருவதாக செய்திகள் வந்தன.
 
மேலும், தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில் தளபதி சுதாரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் வேறு வழிஇன்றி தலைவரை வீட்டுக்கு அனுப்பலாம். அல்லது வீடு சிறையில் வைத்து விட்டு தலைமை, தலைவர் பொறுப்பு இரண்டையும் அதிரடியாக கைப்பற்ற வியூகம் வகுப்பட்டு விட்டதாக தளபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுவதாக நேற்று இணையத்தில் செய்திகள் பரவியது.
 
இந்த செய்தி திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அழகிரி தரப்பிலும் இதற்கு எதிர்பு கிளம்பியதாக செய்திகள் பரவியது.
அடுத்த கட்டுரையில்