கேப்டன் விஜயகாந்த குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்! – தேமுதிக அறிக்கை!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (15:08 IST)
சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து வெளியாகும் வந்ததிகளை நம்ப வேண்டாம் என தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த சமீபத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் அவர்குறித்த பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேமுதிக “கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் குறித்த தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளை தேமுதிக தலைமை கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற போலி செய்திகளை வெளியிடுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.

மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம். கேப்டன் உடல்நிலை குறித்து தலைமை கழகம் வெளியிடும் அறிக்கை மட்டுமே உண்மையானது” என அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்