17 தொகுதிக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அண்ணா திராவிடர் கழகம்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (18:30 IST)
முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அண்ணா திராவிடர் கழகம்!
தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன 
 
அந்த வகையில் தற்போது திடீரென திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சி முதல் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. சசிகலாவின் சகோதரர் திவாகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணா திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார் 
 
டிடிவி தினகரனுக்கு போட்டியாக இந்த கட்சியை திவாகரன் ஆரம்பித்ததோடு, தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து நிலையில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்