தினகரனுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட நான்கு கட்சிகள் போட்டி.....

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (18:01 IST)
கடந்த 2016  ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று பெற்ற முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அங்கு 2017 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றார்.

இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் கூறப்பட்டது. இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தினகனின் அமமுக போட்டியிடவுள்ள தொகுதிகளின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இதே தொகுதியில் , அதிமுக சார்பில் அமைச்சர் கடம்ப்பூர் ராஜு, திமுக சார்பில், நாம் தமிழர் கட்சி சார்பில் மோமதி , மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒருவரும் போட்டியிடவுள்ளனர்.

இங்கு ஐம்முனை போட்டி நிலவுவதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்