பொள்ளாச்சி பாலியல் வழக்கு… கைதிகளுக்கு சலுகை வழங்கிய காவலர்களுக்கு பணியிடை நீக்கம்!

வியாழன், 21 அக்டோபர் 2021 (11:28 IST)
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில் 6 மாதத்திற்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் படம் எடுத்து மிரட்டிய வழக்கில் அப்போதைய அதிமுக நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில் ஜாமீன் கேட்டு அருளானந்தம் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து புதிய உத்தரவு பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தினசரி விசாரித்து 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டுமென கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதிகளை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு திரும்ப அழைத்துச் செல்லும் வழையில் அவர்களின் உறவினர்களைப் பார்க்க முறைகேடாக அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரை சஸ்பெண்ட் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்