பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியர்; பணியிடை நீக்கம் செய்த பள்ளி நிர்வாகம்!

புதன், 27 அக்டோபர் 2021 (08:20 IST)
உலகக்கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் வென்றதை கொண்டாடிய ராஜஸ்தான் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவதாக களம் இறங்கிய பாகிஸ்தான் விக்கெட்டே இழக்காமல் 152 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை நபீசா அட்டாரி என்பவர் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடி பதிவிட்டுள்ளார். இதற்காக அவரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்