நீட்தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவி காதலருடன் தஞ்சம்?

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (15:01 IST)
நீட் தேர்வு எழுதிய இரண்டு நாட்களில் மாயமான மாணவி காதலனுடன் தஞ்சம் அடைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஸ்வேதா என்பவர் இரண்டாவது முறையாக கடந்த ஞாயிறு அன்று நீட் தேர்வு எழுதினார். இதன் பின்னர் அவர் திடீரென மாயமானதாக கூறப்பட்டதை அடுத்து அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். 
 
இந்த நிலையில் சுவேதாவை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வந்து கொண்டிருந்த போது அவருடைய காதலனுடன் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஸ்வேதா தனது காதலனுடன் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அவருடைய பெற்றோரை அழைத்து இதுகுறித்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்