நீட் தேர்வு எழுதிய 1.12 லட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (07:15 IST)
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது
 
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மனநல ஆலோசனை 104 என்ற எண் மூலம் தொடங்கியதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் எழுதிய இரண்டு பேருக்கு மனநல ஆலோசனைகள் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்
 
நீட் எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 15 நாட்களில் 333 மனநல ஆலோசகர்கள் ஆலோசனை தருவார்கள் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார். தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை என 12 வகைகளில் மாணவர்களுக்கு ஆலோசனை தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
நீட் எழுதிய அனைத்து மாணவர்களையும் தொலைபேசி எண்களை தேசிய தேர்வு முகமை இடம் பெற்றிருப்பதாகவும் 1.12 லட்சம் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்