அண்டர்கிரவுண்டில் தொடர்பு: தினகரன் கூறுவது என்ன?

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (20:48 IST)
தமிழக் ஆளும் கட்சியும் பாஜகவும் வெளியில் எதிரிகளை போல சில சமயங்களில் நடந்துக்கொண்டாலும் இவர்களுக்கு இடையில் அண்டர்கிரவுண்டில் தொடர்பு இருப்பதாக தினகரன் பேட்டி அளித்துள்ளார்.
 
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் பின்வருமாறு பேசினார். குருட்டு அதிஷ்ர்ஷ்டத்தில் பதவி கிடைத்ததால், சட்டமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்சியை ஓட்டலாம் என நினைக்கின்றனர். 
 
நிதி நெருக்கடி நிலவும் சூழலில் எம்எல்ஏக்களின் சம்பளத்தை 100 சதவிகிதம் உயர்த்தியது ஏன்? எனக்கு இந்த ஊதிய உயர்வு தேவையில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டேன்.
 
மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் ஆட்சியை ஓட்டிவிடலாம் என நினைக்கின்றனர். இருட்டில் நடப்பவர் பயத்தை மறைக்க ஜெயக்குமார் போன்றோரை வைத்து வாய்ச்சவடால் விடுகின்றனர். 

பாஜகவை எதிர்த்தாலும், அண்டர்கிரவுண்டில் அவர்களுடன் தொடர்பில்தான் உள்ளனர். பாஜகவின் ஆசீர்வாதத்தால்தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்