முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்!

வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (14:37 IST)
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
 
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் பொருப்பேற்ற பின்னர் பலரும் அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து, தினகரன் வெற்றி பெற்ற பின்னர் கட்சியில் தினகரனுக்கு ஆதரவாக உள்ளவர்களை களையெடுக்கும் பணியை தீவிரமாக ஆரம்பித்துள்ளனர்.
 
தினகரனுக்கு ஆதரவாக உள்ள பலரையும் கொத்து கொத்தாக கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியை நீக்கி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளனர். கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருவரும் நீக்கப்படுவதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென் சென்னை மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 50 அதிமுக நிர்வாகிகளும் நீக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்