தினகரனின் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியில் அம்மா

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (11:18 IST)
மதுரை மேலூரில் நடைபெற்று வரும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் சற்றுமுன் டிடிவி தினகரன் தனது அமைப்பின் பெயராக “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்று அறிவித்தார். இந்த நிலையில் இந்த அமைப்பின் கொடியையும் அவர் சற்றுமுன்னர் தனது தொண்டர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தினகரன் அமைப்பின் கொடி கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு நிறத்தில் உள்ளது. மேலும் இந்த கொடியின் நடுவில் ஜெயலலிதாவின் படமும் உள்ளது.

ஜெயலலிதாவின் படத்துடன் வெளிவந்துள்ள இந்த கொடியை தினகரன் அறிமுகம் செய்து ஏற்றி வைத்தவுடன் தொண்டர்கள் போட்ட கரகோஷம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்