தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணை

செவ்வாய், 26 மார்ச் 2019 (11:00 IST)
தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்குவது சம்மந்தமான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது.
 
வரும் மக்களவை தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடும் நிலையில் இந்த தேர்தலில் தனது கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால், தேர்தல் ஆணையம் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்ததால் இதுகுறித்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். 
 
இது தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் தற்போது  நடைபெற்று வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற தீர்ப்பு வெளியாக இருக்கிறது.
 
ஒரு வேலை  குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட தயார் எனவும் தினகரன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்