திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ஒன்றாக தேர்தலை சந்திக்க இருக்கிறது. தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருப்பது ஸ்டாலினுக்கு பெரிய பிளஸ்சாக உள்ளது.
அமமுக வேட்பாளர்கள் இதற்கு முன் அதிமுகவில் இருந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு இப்போதும் அதிமுக தொண்டர்களின் ஆதரவு நிறைய இருக்கிறது. தேனியில் ரவீந்திரநாத்திற்கு போட்டியாக தங்க தமிழ்ச்செல்வன், நெல்லையில் மனோஜ் பாண்டியனை எதிர்த்து மைக்கேல் ராயப்பன், தருமபுரியில் அன்புமணிக்கு எதிராக பழனியப்பன் எல்லாம் தினகரனின் பக்கா பிளான்.
ஆனால், தினகரனின் ப்ளானை வைத்து ஸ்டாலின் ரிஸ்க் இல்லாமல் ஈஸியாக வெற்றி பெற திட்டம் போட்டுள்ளார். அதாவது, திமுக கூட்டணியின் வாக்கு எப்போதும் போல வரும், அதேசமயம் அதிமுக வாக்கு அமமுக பக்கம் செல்லும். அதாவது அதிமுகவின் வாக்கு வங்கி பிரியும்.