பிரச்சாரத்தில் ஜெ.வை முன்னிறுத்தும் தினகரன் - கடுப்பில் சசிகலா தரப்பு

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (13:18 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் தினகரன், ஜெயலலிதா பெயரை முன்னிறுத்தி வருவதால், சசிகலா தரப்பினர் கோபம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 


 

 
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் என இரண்டு அணிகள் உருவாகி விட்டன. மேலும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னமும் தினகரனுக்கு கிடைக்க விடாமல் செய்து விட்டது ஓ.பி.எஸ் தரப்பு. அதற்கு ஒரு படி மேலே போய், அதிமுக என்கிற பெயரையே யாரும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. 
 
எனவே வழக்கமாக இரட்டை இலைக்கு கிடைக்கும் ஓட்டுகள் இந்த முறை தினகரனுக்கு கிடைக்காது. மேலும், ஏற்கனவே, ஜெ.வின் மரணத்தில் சசிகலா மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களின் ஓட்டு நிச்சயம் தினகரனுக்கு கிடைக்காது என ஓ.பி.எஸ் தரப்பு நம்புகிறது. இதை, உளவுதுறை அதிகாரிகள் மூலம் உணர்ந்துள்ளார் தினகரன். எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது, எந்த இடத்திலும் சசிகலாவின் பெயரை அவர் உச்சரிப்பதில்லை.  ஜெ.வின் திட்டங்கள் குறித்து மட்டுமே அவர் பேசி வருகிறார்.
 
இது சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா இல்லையெனில் தினகரன் எப்படி மீண்டும் கட்சிக்கு வந்திருக்க முடியும்? எப்படி துணைப் பொதுச்செயலாளர் ஆகியிருக்க முடியும் என்கிற ரீதியில் கேள்வி எழுப்பின் வருகின்றனராம். 
 
ஆனால் அது எதையும் பொருட்படுத்தாமல், தொப்பி சின்னத்தில் எப்படி வெற்றி பெறுவது என்கிற வேலையில் தினகரன் மும்முரம் காட்டி வருகிறார் எனக் கூறப்படுகிறது.

பிரச்சாரத்தில் மட்டுமல்ல. சமீப காலமாகவே அவர் எந்த இடத்திலும் சசிகலாவை பற்றி பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது...
அடுத்த கட்டுரையில்