நிர்மல் குமாரை அடுத்து அதிமுகவில் இணைந்த திலிப் கண்ணன்.. பாஜகவினர் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (12:28 IST)
நிர்மல் குமாரை அடுத்து அதிமுகவில் இணைந்த திலிப் கண்ணன்.. பாஜகவினர் அதிர்ச்சி..!
பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகிய நிர்மல் குமார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று பாஜகவில் இருந்து விலகிய திலிப் கண்ணன் என்பவரும் நிர்மல் குமாரை தொடர்ந்து அதிமுகவில் இணைந்துள்ளார். 
 
பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆக இருந்தவர் திலிப் கண்ணன் என்பதும் இவர் பாஜக மேலிடம் மற்றும் அண்ணாமலை ஆகியோரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நேற்று திடீரென பாஜகவில் இருந்து விலகினார் என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகிய திலிப் கண்ணன், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பாஜகவில் இருந்து விலகியவர்களை அடுத்தடுத்து அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி சேர்த்து வருவது கூட்டணிக்கு பிளவு ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்