பிரதமர் வேட்பாளர் யார் என சொல்ல முடியுமா? எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்..!

திங்கள், 6 மார்ச் 2023 (10:49 IST)
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை சொல்ல முடியுமா என எதிர்கட்சிகளுக்கு பாஜக சவால் விடுத்துள்ளது. 
 
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனித்து போட்டி என்று அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இந்த நிலையில் பாஜகவை எதிர்த்து ஒரு வலுவான கூட்டணி அமையுமா? எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் கூட்டணியை ஏற்படுத்துமா? என்ற சந்தேகம் ஏற்படுத்துள்ளது. ஏனெனில் பல கட்சிகள் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டும் என முயற்சித்து வருகின்றன 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட ஒரு சிலர் மட்டுமே காங்கிரசை கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உட்பட ஒரு சில தலைவர்கள் காங்கிரஸ் இல்லாத கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பிரதமர்  வேட்பாளர் யார் என்று கூற முடியுமா என பாஜக சவால் விடுத்துள்ளது. இந்த சவாலை எதிர்கொண்டு ஒற்றுமையாக எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இணைந்து பிரதமர் வேட்பாளரை அறிவிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்