பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் - முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்

திங்கள், 6 மார்ச் 2023 (19:47 IST)
மத்திய பிரதேச  மாநிலம் சிவராஜ் சிங் சவுகான் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், தன் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா நிலத்தில் நளிவுற்ற ஏழைப்பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கு திட்டத்தை மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கிவைத்தார்.

இதற்கு குறிப்பிடளவு வருமானம் மட்டுமே இருக்க வேண்டுமென்று கூறியிருந்த நிலையில், இத்திட்டத்தின் மூலம் பெண்களின் சமூகப் பொருளாதார நிலை  உயரும் என்றும், இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைய உள்ளதாகக் கூறினார்.

இந்த  நிலையில், இத்திட்டத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடியை மா நில அரசு  ஒதுக்கியுள்ளது. மேலும், இத்திட்டத்தின் இணைந்துள்ள பயனாளிகளுக்கு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், 5 ஏக்கருக்கு குறைவான  நில வசதி கொண்ட பெண்களும்  விண்ணப்பிக்கலாம் எனவும், வரும் 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள்  விண்ணப்படிவம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்