டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கடந்த 26 ஆம் தேதி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதனை அடுத்து அவரை 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது.
சிபிஐ காவலில் அடைக்கப்பட்டு, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, நீதிமன்றம், சிசோடியாவை மேலும் 2 நாட்கள்( மார்ச் 6ஆம் தேதி வரை) காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது.
சிபிஐ காவல் முடிந்த நிலையில், இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிசோடியாவை சிபிஐ ஆஜர்படுத்தினர். இந்த விவகாரத்தில், மணீஸ் சிசோடியா தரப்பினர் அரசியல் செய்வதாக சிபிஐ தரப்பில் தெரிவித்தனர்.