பள்ளி சென்ற மாணவி கருகிய நிலையில் சடலமாக மீட்பு! – திண்டுக்கலில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (16:13 IST)
திண்டுக்கலில் பள்ளிக்கு சென்ற சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கீழ்மலை பாச்சலூர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற சிறுமியை காணவில்லை என கடந்த 11ம் தேதி அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் உடல் புதர் ஒன்றில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் அளித்த வாக்குறுதியின்பேரில் அவர்கள் உடலை பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்