வெளுக்கும் கனமழை; சதுரகிரி செல்ல தடை! – பக்தர்கள் ஏமாற்றம்!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (07:47 IST)
தமிழகத்தில் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு மாதம்தோறும் பிரதோஷம், பௌர்ணமி காலத்தில் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கமாக உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல மாதத்தில் 4 நாட்கள் வனத்துறை அனுமதி அளித்து வந்தது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் இந்த மாதம் பௌர்ணமி, பிரதோஷத்திற்காக நவம்பர் 5 முதல் 9 வரை பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல இருந்த நிலையில், மழை காரணமாக புனித யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமும் மழை காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்