10 மணி வரை வெளுக்கும் மழை எங்கெங்கு தெரியுமா??

செவ்வாய், 1 நவம்பர் 2022 (08:31 IST)
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.


சமீபத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Edited By: Sugapriya Prakash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்