இன்றுடன் கெடு முடிகிறது! பணிக்கு வருபவர்களை தடுத்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (08:07 IST)
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த ஒரு வாரமாக நடத்தி வரும் போராட்டத்தால் பள்ளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் போராட்டம் நடத்துபவர்கள் இன்று பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் இன்று பணிக்கு வராத ஆசிரியர்களின் இடம் காலி என அறிவிக்கப்பட்டு தற்காலிக ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் பணிக்கு திரும்பும் ஆசிரியர்களை தடுக்க ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முயற்சிக்கலாம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் இன்று பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுப்பவர்கள் மீது காவல்துறையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் புகார் அளிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் முதலமைச்சர்,  கல்வித்துறை அமைச்சர்  அழைப்பு  விடுத்தால்  எந்த  நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஜாக்டோ ஜியோ  ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் கைது செய்யபட்டவர்களை
உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்