டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (13:40 IST)
கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்  நடைபெறும் நாளான டிசம்பர் 27ஆம் தேதி புதன்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.  

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 6ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் டிசம்பர் 27ஆம் தேதி அன்று  அவசர அலுவல்களை கவனிக்கும்போது பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்