பொன்னையனே நாங்கள் நம்புகிறோம்: சி.வி.சண்முகம் பேட்டி

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (15:06 IST)
பொன்னையனை நாங்கள் நம்புகிறோம் என்றும் அப்படியே அவர் தவறாக பேசி இருந்தாலும் அவர் வயது காரணமாக அதை நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும் அதிமுக எம்பி சிவி சண்முகம் பேட்டி அளித்து உள்ளார். 
 
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்றும் அதிமுக தலைமைக்கு வர கேபி முனுசாமி பணம் கொடுத்து முயற்சி மேற் கொண்டதாகவும் அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது 
 
ஆனால் இந்த ஆடியோவில் உள்ள குரல் தன்னுடைய குரல் இல்லை என்ற பொன்னையன் மறுத்து வந்தார். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக எம்பி சிவி சண்முகம் அது தனது குரல் அல்ல என பொன்னையனே கொடுத்துள்ளார் என்றும் அதை நாங்கள் நம்புகிறோம் என்றும் அப்படியே அவர் கருத்து சொல்லி இருந்தாலும் அவரின் வயது காரணமாக அதில் நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்