தஞ்சாவூரைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூபாய் 756 கோடி இருப்பு இருப்பதாக எஸ்எம்எஸ் வந்ததை அடுத்து அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
கணேசன் என்ற வாடிக்கையாளர் செய்தியாளர்களிடம் பேசிய போது நேற்று இரவில் என்னுடைய கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்காக என்னுடைய அக்கவுண்டில் இருந்து பணம் அனுப்பினேன்.
பணம் அனுப்பிய பிறகு எனக்கு வங்கி கணக்கு இருப்பு குறித்து ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அந்த எஸ்எம்எஸ்-இல் என்னுடைய வங்கி கணக்கு இருப்பு 756 கோடி உள்ளது என்பதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்
உடனே காலையில் வங்கி சென்று விவரம் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காலையில் வங்கியில் சென்று கேட்டபோது இது என்ன மெசேஜ் என்று எங்களுக்கு தெரியவில்லை, சோதனை செய்துவிட்டு உங்களுக்கு தகவல் அனுப்புகிறேன் என்று கூறி என்னை அனுப்பி விட்டார்.
மேலும் எஸ்எம்எஸ் வந்த ஸ்க்ரீன்ஷாட் மற்றும் விவரங்களை மேனேஜர் என்னிடம் கேட்டு வாங்கிகொண்டார். மேலும் என்னுடைய காண்டாக்ட் நம்பரையும் வாங்கி வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார்.
உண்மையில் அவரது கணக்கில் 756 கோடி இருப்பு இருக்கிறதா? அல்லது தவறுதலாக மெசேஜ் அனுப்பப்பட்டு விட்டதா என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்.