தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (19:23 IST)
தமிழகத்தில்  இன்று 5 ஆயிரத்திற்குக் கீழ் கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 24, 70, 678 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,553 ஆகும். இதுவரை பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 23, 97, 336 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், இன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,388  ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 291 ஆகும். இங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,32, 006 ஆகும்.

தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 40,954 பேர் சிகிசை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்