யூடியூபர் மாரிதாஸை வரும் டிசம்பர் 27 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (13:56 IST)
சமீபத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் தேனி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பதும் தெரிந்ததே. 
 
மேலும், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அவர் தனியார் தொலைக்காட்சி மீது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகவும் இதனை அடுத்து அந்த தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி கொடுத்த மோசடி புகாரில் கைதான மாரிதாஸ் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வரும் டிசம்பர் 27 வரை யூடியூபர் மாரிதாஸ்  சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்