அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

திங்கள், 13 டிசம்பர் 2021 (10:21 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கி சென்னை உள்ளிட்ட பல பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து கடந்த 10 நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை.

இந்நிலையில் இப்போது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்