ராணுவ வீரர்கள் இதயத்தில் இடம்பிடித்து விட்டீர்கள்! – முதல்வருக்கு லெப்டினெண்ட் கடிதம்!

திங்கள், 13 டிசம்பர் 2021 (11:15 IST)
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவத்தினர் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், முதல்வருக்கு நன்றி தெரிவித்து லெப்டினெண்ட் ஜெனரல் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த வாரம் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் போது துரிதமாக செயல்பட்டு ராணுவ வீரர்களை மீட்ட குன்னூர் மக்கள், காவல்துறை மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்திருந்தது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் துரிதமாக செயல்பட்டது, ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தது உள்ளிட்டவற்றிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவ லெப்டினெண்ட் ஜெனரல் அருண் என்பவர் நன்றி தெரிவித்துள்ளார். ” ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர் உயிரிழந்த துயரமான நேரத்தில், குடும்பத்தினருக்கு தாங்கள் அருகில் இருந்து ஆறுதல் அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும், இதயபூர்வமான பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்