திமுக எம்.எல்.ஏ மகன் - மருமகள் கொடுமைப்படுத்திய விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண் ஆஜராக உத்தரவு

Mahendran
வியாழன், 15 பிப்ரவரி 2024 (13:10 IST)
திமுக எம்.எல்.ஏ மகன் - மருமகள் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில்  ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திரு நறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த செல்வி, சென்னையில்  பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்ந்து நிலையில் அவரை ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி இருவரும் அடித்து துன்புறுத்தியதுடன், சிகரெட்டால் சூடு வைத்து, தலைமுடியை வெட்டி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில்  புகார் அளிக்கப்பட்ட நிலையில், நீலாங்கரை மகளிர் போலீஸார், வீட்டு   வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ.வின்  மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண் நேரில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை பிப்.21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு என நீதிபதி அறிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்