இஷான் கிஷான் மீண்டும் அணியில் இணைவது சம்மந்தமாக பேசிய பயிற்சியாளர் டிராவிட், “இஷான் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போதுதான் அவர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவார்” எனக் கூறியிருந்தார். இதன் மூலம் இப்போதைக்கு இஷான் கிஷான் மேல் தேர்வுக்குழுவினரின் பார்வை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் அவர் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை இப்போது தொடங்கியுள்ளார். இது பிசிசிஐக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரு வீரர் இந்திய அணியின் பயிற்சியாளர் அறிவுரை இல்லாமல் இதுபோல தனியாக பயிற்சியில் ஈடுபடக் கூடாது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ இஷான் கிஷானின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அனைத்து வீரர்களையும் உள்ளூர் போட்டிகளில் விளையாட சொல்லி அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது.