விடுவிக்கப்படுவார்களா நீட் மாணவர்கள்? – நீட் முறைகேடு குறித்து நீதிபதிகள்

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (13:10 IST)
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யாவின் தந்தையே குற்றத்திற்கு முழு பொறுப்பு என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித்குமார் என்ற மாணவரும், அவரது தகப்பனாரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்த விசாரணையில் இதுபோன்று 10 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக பிடிப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உதித்சூர்யா ஆள்மாறாட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்துக்கு உதித்சூர்யாவின் தந்தையே முழுக்காரணம் என்றும், மாணவரின் வயதை கருத்தில் கொண்டு அவரது முன் ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக ஏற்று விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் வயது முதிர்ச்சியில்லாத மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க நீதிபதிகள் விரும்ப மாட்டார்கள் என தெரிகிறது. எனவே மற்ற மாணவர்கள் விவகாரங்களிலும் அவர்கள் சிறியளவிலான தண்டனை அல்லது ஆலோசனையுடன் விடுதலை செய்யப்படாலாம் எனவும், குற்றத்திற்கு காரணமான அவர்களது தந்தையர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்