கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நெய்தலூர் காலணி பகுதியில் நாகராஜ் என்பவர் கடந்த 10 நாட்களாக அரசு மதுபானகடை அருகே அரசு அனுமதியுடன் பார் நடத்தி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த குஞ்சடைக்கான் என்பவர் அதே பகுதியில் அரசு மதுபான கடை அருகே கள்ளத்தனமாக சந்து கடை நடத்தி வருவதாகவும் இரு தரப்பினரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு குஞ்சடைக்கான் என்பவர் 10 பேரை அனுப்பி நாகராஜ் வைத்திருக்கும் பாரில் உள்ளே புகுந்து பிரிட்ஜ் அடுப்பு டேபிள் நாற்காலிகளை உடைத்தும் நாகராஜ் மீது அரிவாளால் கையில் மற்றும் காலில் வெட்டியும், தடுக்க வந்த செல்லமுத்து, விஜயகுமார் மீதும் தலை மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டியதில் 3 பேரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மாருதி என்கிற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து நாகராஜ் அளித்த புகாரின் பேரில் குஞ்கடைக்கான் மற்றும் அவருடன் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு வேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தாக்குதலால் குஞ்கடைக்கான் என்பவருக்கு சொந்தமான கார், வேன், ஹோட்டல் மற்றும் பேக்கரி கடைகளில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக போலிசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து குளித்தலை போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தினால் கரூர் அருகே உள்ள அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.