இதனையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்த கொரோனா பாதிப்பில்இருந்து மக்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஊரடங்கு உத்தரவை கடைப்பிக்க வேண்டும்;சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் படுவேகமாகப் பரவி வருகிறது. இதற்கான 8 ஆய்வகம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில், இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் 4 பேருக்கும், அவர்களின் சுற்றுலா வழிகாட்டியான சென்னை நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.