ஏகத்துக்கும் உயர்ந்த கொரோனா; சென்னையில் பல ஏரியாக்கள் சீல்!!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (10:00 IST)
ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பும் சென்னையில் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கிறது.
 
தமிழகத்தில் மேலும் 5185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,44,128 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பும் சென்னையில் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கிறது. சென்னையில் தொற்று அதிகரிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளது.
 
கடந்த 6 ஆம் தேதி சென்னையில் மொத்தம் 42 தெருக்களுக்கு மட்டுமே சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70 ஆக அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்