ஓட்டுநருக்கு கொரொனா ... பாதிவழியிலேயே காரில் இருந்து இறங்கிய அமைச்சர்

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (18:01 IST)
தமிழகத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளானர். மக்கள் பாதிப்படைவதைத் தடுக்க அரசு பலவித நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  தன் ஓட்டுநருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்ததை அடுத்து,அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்  பாதி வழியில் காரில் இருந்து இறங்கிச் சென்றார்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று தனது ஓட்டுநருடன் காரில் ஆரணிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது ஓட்டுநருக்கு கொரொனா இருப்பது உறுதியானதை அடுத்து, அவர் பாதி வழியிலேயே காரைவிட்டு இறங்கி வேறு வாகனத்தில் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்