கனிசமாக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை - புதுச்சேரி நிலவரம்!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (11:01 IST)
புதுச்சேரியில் மேலும் 640 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,61,891 ஆக உயர்ந்துள்ளது. 

 
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனோ தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆம், கல்வி நிறுவனங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
 
அதோடு கடற்கரைகள் முழு நேரமும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளிலும் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 640 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,61,891 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,069 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்தாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 9,267 பேர் கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்