போதையில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவன் !

திங்கள், 31 ஜனவரி 2022 (22:15 IST)
குடிபோதையில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவன் போலீஸில் சரணடைந்தார்.

சென்னையை அடுத்த புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் தளபதி, சண்முகப்பிரியா தம்பதியர். தளபதி கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல்  மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவி மற்றும் மகங்களை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் வீட்டை தன் பெயரில் எழுதித் தரும்படி கேட்டுள்ளார் சண்முகப்பிரியா.

நேற்று இரவும் மதுக்குடித்து வந்த கணவரிடம் வீட்டை எழுதித் தரும்படி கேட்டுள்ளார் தளபதி. இதில், ஆத்திரம் அடைந்த  தளபதி கத்தியால் சண்முகப்பிரியாவைக் குத்தியுள்ளார்.  பின்னர் தளபதி  காவல் நிலையம் சென்று சரணடைந்தார். கத்திக் குத்தில் காயம் அடைந்த சண்முகப்பிரியா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்