தமிழக மீனவர்களை மீண்டும் பிடித்த இலங்கை கடற்படை! – மக்கள் அதிர்ச்சி!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:20 IST)
வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது, கைது செய்வதும், படகுகளை சேதம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள் பலரை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு கைது சம்பவம் நடந்துள்ளது. நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக அவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இவ்வாறாக பறிமுதல் செய்த படகுகளை சமீபத்தில் இலங்கை அரசு ஏலத்தில் விட்டது தமிழக மீனவர்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்