கொரோனா கம்மல் - வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள்!!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (12:06 IST)
ட்ரெண்ட் ஆகி வரும் கொரோனா ஜிமிக்கி கம்மலை வாங்க பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பலரை பயப்பட வைத்தாலும் இதனை வைத்து வியாபாரம் பார்த்த பலரும் உள்ளனர். ஆம் கொரோனா வைரஸ் வடிவிலான தோசை, புரோட்டா என பல்வேறு பொருட்கள் மார்க்கெட்டுக்கு வந்ததால் மக்கள் கவனம் அதன் மேல் திரும்பியது. 
 
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் வடிவில் தங்க கம்மல் விற்பனைக்கு வந்துள்ளது. இது பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மதுரையில் உள்ள நகைக்கடையில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆங்க பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்