சமீபகாலமாக இணையத்தில் பல தமிழ் பாடல்கள் ஹிட்டடித்து வருகின்றன. அந்த வகையில் குட்டி பட்டாஸ் மற்றும் இன்னா மயிலு ஆகிய இரு பாடல்களும் பெரிய நடிகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடல் ஆசிரியர்கள் இல்லாமல் பிரபலமாகியுள்ளன. இதில் குட்டி பட்டாஸ் என்ற பாடலில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்திருந்தார். இந்த பாடல் இப்போது இணையத்தில் 12.5 கோடி பேர் பார்த்துள்ளனர்.