சென்னை கொரட்டூர் வாட்டர் கேனால் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 16 ஆவது மாடியில் இருந்து ஒரு மாணவி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது சம்மந்தமாக் போலிஸாருக்கு தகவல் செல்ல அவர்கள் சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். அந்த சிறுமி பற்றி விசாரித்ததில் அந்த அபார்ட்மெண்ட் வாசிகள் சிறுமியை யாரென்று தெரியவில்லை எனக் கூறியுள்ளனர்.
சீருடை மற்றும் பள்ளி பை ஆகியவற்றை வைத்து மாணவி எனக் கண்டுபிடித்த போலிஸார், பையில் இருந்து அவர் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த வைஜெயந்தி என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் சொல்லி வரவழைத்துள்ளனர்.