தண்ணீர் திருடும் விவசாயிகளுக்கு கடன் கிடையாது! – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (15:29 IST)
தமிழகத்தில் தண்ணீர் திருட்டில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசு கடன் வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தமிழகத்தின் அடையாளமாக விவசாயம் பார்க்கப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் விவசாயத்தின் முக்கிய புள்ளியாக விளங்கி வருகின்றன.

இதனால் விவசாயிகளையும், விவசாயத்தையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி கடன், மானிய விலையில் உரம், விதை விற்பனை மற்றும் பயிர்காப்பீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் “தண்ணீர் திருட்டு வழக்கில் சிக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பிலான கடன் திட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் மானிய விலையில் விதை, உரம் வழங்குவதையும் ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்