இர்பான் விவகாரம்: ரெயின்போ மருத்துவமனைக்கு தடை.. ரூ.50,000 அபராதம்..!

Mahendran
புதன், 23 அக்டோபர் 2024 (18:56 IST)
பிரபல யூடியூபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு 10 நாட்கள் தடை விதித்து டிஎம்எஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவிக்கு பிரசவமான போது, குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், மன்னிப்பு கேட்டு சம்பந்தப்பட்ட வீடியோவையும் நீக்கினார்.

இருப்பினும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது யூடியூபர் யூடியூபர் மனைவிக்கு பிரசவம் பார்த்த ரெயின்போ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பத்து நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஐம்பதாயிரம் அபராதம் விதித்து டிஎம்எஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின் 10 நாட்களுக்கு மருத்துவமனை நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்